Thanjavurkaran Ennangal <data:blog.pageName/> ~ <data:blog.title/>

Friday, June 15, 2012

P.A.. சங்மாவும் பின்னே ஞானும்

நான் சிறுவன் ஆக இருந்த காலத்தில் எனது தந்தையுடன் அவரது தொழிலாளர் கூட்டங்களுக்கு செல்வதுண்டு. தென் பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் (SRES) தஞ்சை கிளை தலைவராக இருந்தார்.

அப்படி ஒரு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்தவர்தான் இப்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் புகுந்துள்ள சங்மா. அப்போது ரயில்வே மந்திரியாக இருந்த கணிகன் சௌத்ரி தன்னால் வர இயலாத நிலையில் தன் சார்பாக இவரை அனுப்பி வைத்ததாக என் அப்பா சொல்லி இருக்கிறார்.

 பேச்சாளருக்கு சால்வை அணிவிக்கும் எனது தந்தை. கூர்ந்து கவனிக்கும்  சங்மா.

தனது கிளை மீட்டிங்குக்கு வந்ததால் தானோ என்னவோ என் அப்பாவுக்கு இவரை ரொம்பவும் பிடிக்கும். ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு பி வி நரசிம்ம ராவ் அல்லது சரத் பவார் இருவரில் யார் அடுத்த பிரதமர் என்ற காலத்தில் சங்மா வரலாம் என்பார் வெகு சீரியஸ் ஆக.  நடக்கிற மாதிரி  பேசுங்க என்பேன்.

ஆனால் அவரே இப்போது ஜனாதிபதி வேட்பாளராக. வாச்சாத்தி முதல் திருக்கோயில் வரை மலையக மக்களின் வாழ்வை குலைக்கும் ஜெயலலிதாவின் "மலையக மக்களின்"  பிரதிநிதியாக நிறுத்துகிறோம் என்ற கூற்றுடன்.

நான் வளர வளர  சங்மா அரசியலில் வெகு உயரத்திற்கு வளர்ந்திருந்தார். 1996-1998  காலத்தில் மக்களவை சபா நாயகராக மிக அருமையாக அவையை நடத்தினார்.  தொலைக்காட்சி செய்தியில் கண் அசைக்காமல் பாப்போம். பிறகு 1998 NDA  ஆட்சியில்  சபா நாயகர் தேர்தல் இல்லை என்று கடைசி வரை நம்ப செய்து இறுதி நேரத்தில் பாலயோகியை சபாநாயகராக்கிய  NDA + ஜெயாவை நம்பி மறுபடியும் ஒரு தேர்தல் களத்தில்.

பிறகு NDA ஒரே ஓட்டில் பாலயோகியின் தவறான முடிவால் கவிழ்ந்தார்கள் .


இடைப்பட்ட காலத்தில் சங்மா தனது மகனை மேகாலய எதிர்க்கட்சி தலைவர், மகளை அமைச்சர் ஆக்குவது என மேகாலயாவின் கருணாநிதி ஆக மாறி போய்விட்டார்.

சோனியா Congress தலைமை ஏற்பதையே  ( பத்திரிகைகள் சொல்வது போல் பிரதமராவதை அல்ல - அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே ) எதிர்த்தவர் இப்போது மன்னிப்பு கேட்டு பல்டி அடித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் களம் சூடேறி விட்ட நிலையில் ஜெயலலிதா கடைசிவரை இவருடன் இருப்பாரா? - மில்லியன் டாலர் கேள்வி.

வாய்ப்பு இல்லை அல்லது மிகவும் குறைவு என்றாலும்.  இவர் ஜனாதிபதி ஆனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

காரணம் ஏற்கனவே சொன்னது போல - இவரை எனது தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.


பின்னே ஞான் எங்கே என்று கேட்பவர்களுக்கு  -  கீழே உள்ள போட்டோவில் அதே மேடையில்  இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் சிறுவன் அடியேன்தான். அம்புக்குறி காட்டுவது எனது தந்தை (அமர்ந்திருப்பது)


 போட்டோவை மட்டும் Facebook இல் போட நினைத்தேன். சில தகவல்களுடன் போட்டால் நன்றாக இருக்கும் என்பதால் தனி பதிவாக எனது ப்ளாக் இல் போட்டு விட்டேன்.


பொறுமையாக படித்தமைக்கு நன்றி.

1 Comments:

Blogger Suresh said...

You have very good memory Shanmugam

1:02 AM  

Post a Comment

<< Home